இறால் பொடிமாஸ் அசத்தலான செம டேஸ்ட்ல...
prawn podimass
இறால் பொடிமாஸ்
தேவையான பொருட்கள்:
பொருள் - அளவு
இறால் - அரை கிலோ
பெரிய வெங்காயம் - 2,
பச்சை மிளகாய் - 5,
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - அரை டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 1 கொத்து
கொத்தமல்லி தழை - 1 கைப்பிடி
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - தேவைக்கேற்ப

செய்முறை :
முதலில்,இறாலை சுத்தம் செய்து மஞ்சள் சேர்த்து வேக வைத்து, பின் பொடியாக நறுக்கி வைக்கவும். வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கி வைக்கவும்.
பிறகு,வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு சிவந்ததும், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
அதன் பிறகு பொடியாக நறுக்கிய இறால், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து உதிர் உதிராக வரும் வரை கிளறி, கொத்தமல்லி இலையை சேர்த்து இறக்கவும். சுவையான இறால் பொடிமாஸ் ரெடி.