பாமகவிற்கு என்ன சின்னம் தெரியுமா? தேர்தல் ஆணையம் அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு தமிழ்நாட்டில் அதிகாரம் இல்லை என்றால் அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆம் அவர்களது அங்கீகாரம் கடந்த தேர்தலின் போது 0.7 சதவீத வாக்குகளால் பறிபோனது.  

இந்த நிலைக்கு கடந்த மூன்று தேர்தல்களாக  தனியாக போட்டியிட்டதும் ஒரு காரணம். சில ஆயிரம் வாக்குகளினால் தங்கள் அங்கீகாரத்தை இழந்துனர். மாநில கட்சி என்ற அங்கீகாரத்தை இழந்த நிலையில் அவர்களுக்கு நிரந்தர சின்னம் ஒதுக்க முடியாது என்ற தேர்தல் ஆணையத்தின் விதிப்படி அவர்களுடைய மாம்பழம் சின்னம்  கேள்விக்குறியான நிலையில் இருந்தது. 

ஆனால் பாண்டிச்சேரி மாநிலத்தை பொறுத்த வரையில் அங்கே பாட்டாளி மக்கள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட ஒரு கட்சி என்பதால் அவர்களுக்கான மாம்பழ சின்னம் ஒதுக்கப்படும் நிலையில் அதையே தமிழகத்திலும் ஒதுக்கலாம் என்று இந்திய  தலைமை தேர்தல் ஆணையம் தமிழக தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளது.  இதன் மூலம் இந்த தேர்தலில் மாம்பழம் சின்னத்தில் எவ்வித சிக்கலும் இருக்காது என்பது உறுதியாகிறது. 

 இந்த தேர்தலில் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது 6 சதவீத வாக்குகளை பெறுவார்கள் என்றால் அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மாநில கட்சியாக மீண்டும் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

election commission of india confirmed mango symbol of pmk


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->