புர்கா அணிந்து வாக்களிக்க வந்தால் சோதனை செய்யவேண்டும் - பாஜக கோரிக்கை!
Election commission Bihar BJP
வரவிருக்கும் பீகார் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தியது. தேர்தல் நடத்தும் முறைகள் குறித்த ஆலோசனைகள், பரிந்துரைகள் அந்தந்த கட்சிகளிடமிருந்து பெறப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் பேசுகையில், புர்கா அணிந்து வாக்களிக்க வரும் பெண்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்றார்.
வாக்காளர் அட்டையில் உள்ள புகைப்படத்துடன் ஒப்பிடும் விதமாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இது போலி வாக்குகளைத் தடுக்க உதவும் என்று அவர் வலியுறுத்தினார்.
இதற்கு எதிராக ஆர்ஜேடி எம்பி அபய் குஷ்வாஹா கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, பாஜக வலியுறுத்தும் கோரிக்கை தேவையற்றது. ஏற்கனவே தேர்தல் ஆணையம் வாக்காளர் அட்டைகளை சமீபத்திய புகைப்படங்களுடன் புதுப்பித்துள்ளது. அதனால், புர்கா அணிந்த பெண்களை தனியாகச் சோதிக்க வேண்டிய அவசியமே இல்லை என்றார்.
English Summary
Election commission Bihar BJP