மாஸ்டர் பிளான் போடுகிறாரா எடப்பாடியார்...? கவர்னருடன் ஈபிஎஸ் திடீர் சந்திப்பு...! - தமிழக அரசியலில் அடுத்த 'ட்விஸ்ட்' என்ன...? - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபை தேர்தலில் விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றிக்கொடி நாட்டி அரசியல் அரங்கில் அதிர்வலை ஏற்படுத்தியது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவு கிடைத்ததன் மூலம் தவெகவின் பலம் 112 ஆக உயர்ந்துள்ள நிலையிலும், ஆட்சியமைக்க தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு இன்னும் எட்டப்படாததால், இரண்டு நாட்களாகியும் அரசியல் முடிச்சுகள் அவிழாமல் நீடித்து வருகின்றன.

இந்த சூழலில், தவெக தலைவர் விஜய் நேற்று மாலை ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை நேரில் சந்தித்து, தங்களை ஆட்சியமைக்க அழைக்குமாறு கோரி மனு வழங்கினார். ஆனால், பெரும்பான்மைக்குத் தேவையான உறுப்பினர் எண்ணிக்கை இல்லாததால், உடனடியாக ஆட்சியமைக்க அழைப்பு வழங்க ஆளுநர் முன்வரவில்லை.அரசியல் பரபரப்பு உச்சத்தை எட்டிய நிலையில், விஜய் இன்று மீண்டும் ஆளுநரை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது, “தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் முதலில் ஆட்சியமைக்க வாய்ப்பு வழங்கப்பட வேண்டும். முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன்” என்று விஜய் வலியுறுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. ஆளுநர் – விஜய் இடையேயான இந்த முக்கிய சந்திப்பு சுமார் 40 நிமிடங்கள் நீடித்தது.

சந்திப்பின் போது, “113 உறுப்பினர்களை வைத்து எவ்வாறு நிலையான ஆட்சியை அமைப்பீர்கள்? எந்தக் கட்சிகள் உங்களுக்கு ஆதரவு வழங்கும்? பதவியேற்ற பிறகு பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்ற நம்பிக்கை எந்த அடிப்படையில் உருவாகியுள்ளது? உறுதியான ஆதரவு இல்லாமல் அரசை நடத்த இயலுமா?” என்று ஆளுநர் தொடர் கேள்விகளை எழுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு பதிலளித்த விஜய், அரசியல் மரபுகளின்படி தனிப்பெரும் கட்சியை ஆட்சியமைக்க அழைப்பது வழக்கம் என்பதையே மீண்டும் சுட்டிக்காட்டியதாக கூறப்படுகிறது. எனினும், பெரும்பான்மையை நிரூபிக்கும் விவகாரத்தில் விஜய் அளித்த விளக்கங்கள் ஆளுநருக்கு முழுமையான திருப்தியை அளிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இதன் காரணமாக, ஆட்சியமைக்க அதிகாரப்பூர்வ அழைப்பு அல்லது பதவிப்பிரமாணம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் நிலைமை தொடர்கிறது.இதற்கிடையில், அரசியல் களத்தில் புதிய திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை 4 மணியளவில் ஆளுநர் அர்லேகரை சந்திக்க உள்ளார்.

அடுத்த கட்டமாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலினுடனும் ஆளுநர் ஆலோசனை நடத்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் பரவி வருகிறது.தவெகவுக்கு இன்னும் தெளிவான பெரும்பான்மை இல்லை என்ற ஆளுநரின் நிலைப்பாட்டுக்கு மத்தியில் நடைபெறும் இந்த தொடர் சந்திப்புகள், தமிழக அரசியலை நொடியுக்கு நொடி பரபரப்பான திருப்பங்களுக்குள் இழுத்துச் செல்கின்றன. குறிப்பிடத்தக்க வகையில், அதிமுக கூட்டணி இந்த தேர்தலில் 53 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadiyar making master plan EPS surprise meeting governor What next twist Tamil Nadu politics


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->