அதிமுக எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி விடுதிக்கு சென்றுள்ள எடப்பாடி பழனிச்சாமி; முக்கிய ஆலோசனை..? - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் புதிய அரசு ஆட்சியமைப்பதில் இழுபறி நிலவும் சூழலில் அதிமுக எம்எல்ஏக்கள் நேற்றிரவு முதல் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில், எம்எல்ஏக்கள் தங்கியுள்ள புதுச்சேரி விடுதிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்று, அங்கு எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இன்று மதியம் புதிய விடுதி வளாகத்துக்கு அதிமுக எம்.எல்.ஏக்கள்  மாறிய நிலையில், இன்னும் இரண்டு நாட்களுக்கு 40 பேர் இங்கு தங்கிக் கொள்ளும் வகையில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இதை நீடிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது அங்கு ஓ.எஸ் மணியன், தளவாய் சுந்தரம், சேவூர் ராமச்சந்திரன், பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மோகன், நெய்வேலி சட்டமன்ற உறுப்பினர் சொரத்தூர் ராஜேந்திரன், புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மேட்டூர் வெங்கடாசலம் உள்பட 30  எம்எல்ஏக்கள் உள்ளனர்.

இதுபற்றிஅதிமுக உயர் வட்டாரங்களில் தெரிவிக்கையில், தவெக ஆட்சி அமைப்பதற்கான மெஜாரிட்டியை நிரூபிப்பதற்காக பல்வேறு கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் கட்சி மட்டுமே ஆதரவு தெரிவித்துள்ளது. கூடுதலாக 05 எம்எல்ஏக்கள் தேவைப்படும் நிலையில் அதிமுகவில் ஒரு தரப்பினர் தவெகவை ஆதரிக்க விரும்புவதும் தெரிகிறது.

இந்த சூழலில் தவெக ஆட்சி அமைக்க உரிமை கோரிய நிலையில் அதிமுக தரப்பில் இருந்து ஒரு தரப்பினர் விலகி முடிவு எடுப்பதைத் தடுக்கும் வகையில் அக்கட்சி இந்த ஏற்பாடுகளைச் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்கியிருந்த சி.வி. சண்முகம் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்ய இன்று டெல்லி புறப்பட்டுள்ளார். இப்போது மயிலம் தொகுதியில் அதிமுக எம்எல்ஏவாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami visits the Puducherry resort where AIADMK MLAs are staying


கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..



Advertisement

கருத்துக் கணிப்பு

முதல்வர் பதவி ஏற்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து மூன்றாவதாக பாடப்பட்டது..


செய்திகள்



Seithipunal
--> -->