'முதல்வர் ஒரு இழுக்கு'; ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறார்; எடப்பாடி பழனிசாமி விமர்சனம்..! - Seithipunal
Seithipunal


பகுதிநேர ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் நிறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். இதற்கு ஆதரவு தெரிவித்து, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணன் நேற்றைய போராட்டத்தில் ஈடுபட்டார். அதன் பின்னர் அவர், வார்னிஷ் குடித்துள்ளார்.இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி உயிர்ழந்துள்ளார். போராட்டத்தில் ஈடுப்பட்ட ஒருவர் தற்கொலை செய்து கொண்டது சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தநிலையில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இது குறித்து ஆளும் திமுக அரசை விமர்சித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

''ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பொய் வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்தபின் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்களின் உயிரை பறித்துள்ள விடியா திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்கள்.

திமுக கொடுத்த வாக்குறுதிகளால் பணி‌ நிரந்தரம் ஆகிவிடும் எனும் நம்பிக்கையில் காத்திருந்த பகுதி நேர ஆசிரியர் திரு.கண்ணன் அவர்கள், விஷம் அருந்தி உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.

அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் சக ஆசிரியர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல். ஆசிரியர் ஒருவர் மரணித்துவிட்ட கவலை கொஞ்சம் கூட இல்லாமல், கவிதை பாட சொல்லி "Vibe" செய்து கொண்டிருக்கிறாரே... மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் என்ற உயர்வான பதவிக்கே.. இந்த Failure Model முதல்வர் ஒரு இழுக்கு.

உயிரிழந்த திரு.கண்ணன் அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த அரசு உடனடியாக ரூ.50 லட்சம் நஷ்ட ஈடாக வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.மேலும் போராட்டத்தில் ஈடுபடுவோர், இதுபோன்ற முயற்சியில் ஈடுபட வேண்டாம் என்று உங்களை அன்போடு  கேட்டுக்கொள்கிறேன்' என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami criticized that the Chief Minister is vibing and asking people to recite poems without any concern for the death of a teacher


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->