அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி; 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில்..! - Seithipunal
Seithipunal


தமிழர் திருநாளான தைப்பொங்கலை முன்னிட்டு நாளை அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவுள்ளது. இதனையொட்டி, திருப்பரங்குன்றம் சாலையில் பத்திரகாளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ளது. 

அதனை சுற்றி உள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பொதுமக்கள், மாடுபிடி வீரர்கள் மற்றும் ஜல்லிக்கட்டு காளைகளுடன் வருபவர்கள் என ஆயிரக்கணக்கானோர் அங்கு கூடுவர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வாறும், இலகுவான போக்குவரத்தை ஏற்படுத்தும் வகையில் மாநகர காவல்துறை சார்பாக இன்று இரவு மணிமுதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்தநிலையில், ஜல்லிக்கட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த பின் மதுரை மாநகர் காவல் ஆணையர் லோகநாதன் செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளதாவது;

எஸ்.பி. நிலையில் உள்ள அதிகாரிகள் தலைமையில் 2,200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர் என்றும், ஜல்லிக்கட்டு களத்தில் கவசம் அணிந்து காவல்துறையினர் பணியில் ஈடுபடுவர் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், காளைகள் இடையே மோதல்களை தவிர்க்கும் வகையில் முதல் கட்டமாக, முதல் 500 டோக்கன் உள்ள காளைகள் உள்ளே அனுமதிக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், டோக்கன் எண் பிரகாரம் நூறு நூறாக பிரித்து அனுப்பப்படும் என்றும், ஜல்லிக்கட்டு நடைபெறும் இடம், காளைகள் பரிசோதனை செய்யுமிடம், காளை வெளியேறும் இடம் என அனைத்து பகுதிகளிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படும்  என்று அறிவித்துள்ளார். அத்துடன், குடிபோதையில் காளைகளுடன் வந்தால் அனுமதி மறுக்கப்படும் என்று மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

2200 police officers will be deployed for security duty at the Avaniapuram Jallikattu tomorrow


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->