திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம்... பாஜக நயினார் கடும் கண்டனம்!
BJP Nainar Condemn to DMK Udhay MK Stalin
பணி நிரந்தரம் கோரி தொடர்ந்து 6-வது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சென்னை பெரம்பூர் பகுதியைச் சேர்ந்த பகுதிநேர ஆசிரியர் திரு. கண்ணன் என்பவர் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டதாக வெளிவரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.
"உங்க கனவ சொல்லுங்க" என விளம்பர நாடகம் போடும் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள், தங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகத் தெருவில் இறங்கிப் போராடிய ஆசிரியர் திரு. கண்ணன் அவர்களின் வாழ்நாள் கனவிற்கு செவிமடுக்காமல் போனதன் விளைவு தான் இந்த துர்மரணம். உயிரிழந்தவரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் இரங்கல்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆட்சிக்கு வந்தவுடன் பகுதி நேர ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வதாகப் போலி வாக்குறுதியளித்த திமுகவினை நம்பி இத்தனை ஆண்டுகள் காத்திருந்த ஆசிரியர் திரு. கண்ணன் அவர்கள், இறுதியில் தற்கொலை முடிவை எடுத்திருப்பது ஆளும் அரசின் மீதான கரும்புள்ளி. திமுகவின் அப்பட்டமான நம்பிக்கை துரோகத்திற்கு நம்மில் ஒருவரை மீண்டுமொருமுறை நாம் இழந்திருக்கிறோம்.
இப்படிப்பட்ட கொடூர ஆட்சியை ஒழித்தால் மட்டுமே, கடந்த ஐந்து ஆண்டுகளில் அகால மரணமடைந்த அப்பாவி ஆன்மாக்கள் சாந்தியடையும்" என்று தெரிவித்துள்ளார்.
English Summary
BJP Nainar Condemn to DMK Udhay MK Stalin