எம்ஜிஆர்-யை வைத்தே அதிமுகவை விமர்சித்த "வா வாத்தியார்"
Vaa Vaathiyar Review A Misfired Tribute to MGR Nalans Script Lacks Depth
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி, ராஜ்கிரண் நடிப்பில் வெளியாகியுள்ள 'வா வாத்தியார்' திரைப்படம், பொங்கல் விருந்தாக இன்று திரைக்கு வந்துள்ளது. ஒரு சிறந்த கமர்சியல் படத்தைக் கொடுக்க முயன்று, திரைக்கதையில் தடுமாறியிருக்கும் இப்படத்தின் அலசல் இதோ:
கதைக்கரு:
மாசிலா எனும் ஊரில் வசிக்கும் ராஜ்கிரண், ஒரு தீவிர எம்.ஜி.ஆர் ரசிகர். தனது பேரன் கார்த்தியை எம்.ஜி.ஆரைப் போலவே வளர்க்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் வளர்க்கிறார். அந்தப் 'புரட்சித் தலைவர்' காட்டிய பாதையில் கார்த்தி பயணித்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.
பிளஸ் மற்றும் மைனஸ்:
திரைக்கதை சறுக்கல்: 'சூது கவ்வும்' புகழ் நலன் குமாரசாமியிடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அந்தப் புதுமை இப்படத்தில் மிஸ்ஸிங். ஆரம்பக் காட்சிகள் ஆர்வத்தைத் தூண்டினாலும், திரைக்கதையில் அழுத்தம் இல்லாததால் அடுத்தடுத்து வரும் காட்சிகள் பெரும் சோர்வை ஏற்படுத்துகின்றன.
நடிப்பு: ராஜ்கிரண் வரும் காட்சிகள் படத்திற்குப் பலம் சேர்க்கின்றன. கார்த்தி தனது கதாபாத்திரத்திற்கு முழு உழைப்பைத் தந்திருந்தாலும், வலுவில்லாத வசனங்களால் காட்சிகள் எடுபடவில்லை. கிருத்தி ஷெட்டியின் கதாபாத்திரம் திரைக்கதைக்கு வலுசேர்க்கும் வகையில் அமையவில்லை.
காட்சிக் கோர்ப்பு: கார்த்தியும் எம்.ஜி.ஆரும் கண்ணாடி வழியாகச் சந்திக்கும் காட்சி மற்றும் 'ராஜாவின் பார்வை' பாடல் படமாக்கப்பட்ட விதம் ரசிக்க வைக்கிறது. சத்யராஜின் தோற்றம் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
இறுதி அலசல்:
தேர்தல் நெருங்கும் இந்த நேரத்தில் எம்.ஜி.ஆரின் புகழை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இப்படம், இன்றைய அதிமுகவை மறைமுகமாக (நேரடியாக என்றே வைத்து கொள்ளுங்கள்) விமர்சித்துள்ளது. அதற்கவே படம் எடுத்தார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனென்றால் படத்தில் கதையே இல்லை. மொத்தத்தில் வா வாத்தியார் - அட்டகத்தி.
English Summary
Vaa Vaathiyar Review A Misfired Tribute to MGR Nalans Script Lacks Depth