பொங்கல் பண்டிகையின் அடிப்படையான ஆன்மிகத்தை அகற்றி வெறும் கேளிக்கையாக மாற்ற திமுக  முயற்சி - பாஜக எம்எல்ஏ கண்டனம்! - Seithipunal
Seithipunal


 
பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் விடுத்துள்ள அறிக்கையில், "முதலமைச்சர் முக ஸ்டாலின் நேற்று (ஜனவரி 13) வெளியிட்ட பொங்கல் வாழ்த்து செய்தியில், "பொங்கல் திருநாள் என்பது தமிழர்கள் அனைவருக்குமான திருவிழா. அதில் ஜாதி பேதம் கிடையாது. மதம் பேதம் கிடையாது" என கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கொண்டாடப்படும் எந்த பண்டிகைக்கும் ஜாதி, மதம், மொழி உட்பட எந்த பேதமும் கிடையாது. பண்டிகைகள் என்பதே எல்லா வேற்றுமைகளையும் கடந்து, அனைவரையும் அரவணைப்பதுதான். ஆனால், ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒவ்வொரு தத்துவம் உண்டு. பாரம்பரியம் உண்டு. கலாசார பின்புலம் உண்டு.

பொங்கல் பண்டிகை என்பது இந்து தர்மத்தின் அடிப்படையிலான பண்டிகை. இந்துக்கள் தங்களுக்கு உதவும் அனைத்தையும் கடவுளாக வழிபடக் கூடியவர்கள். அந்த அடிப்படையில்தான் உலகம் இயங்க உதவும் சூரியனை கடவுளாக வணங்குகிறார்கள். உழவுக்கு மட்டுமல்ல, மனிதர்களுக்கு பல வகைகளில் துணையாக இருக்கும் ஆடு, மாடுகள் போன்ற கால்டைகளுக்கு நன்றி செலுத்துகிறார்கள். அதுதான் மாட்டுப் பொங்கல்.

பொங்கல் பண்டிகையின்போது வைக்கப்படும் பொங்கல் சூரியக் கடவுளுக்கு படைக்கப்படும் படையல். மாட்டுப் பொங்கலின்போதும், பொங்கல் வைத்து இறைவனுக்கு படைத்து, ஆடு, மாடுகளுக்கு ஊட்டி மகிழ்கிறார்கள்.

ஆனால், திராவிடர் கழகம் உருவான பிறகு, தமிழர்களுக்கு மதம் இல்லை எனக் கூறியவர்களுக்கு பண்டிகைகள் எதுவும் இல்லாததால், பொங்கலை, தங்களது பண்டிகை என உரிமை கொண்டாடத் துவங்கினர். இந்து மத அழித்தொழிப்பை தனது அடிப்படையாக கொண்ட திமுக, இந்துக்களின் பண்டிகையான பொங்கலை, ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் போல, வெறும் கேளிக்கையாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

அதனால் புனிதமான பொங்கல் நாளில், ஷு அணிந்து முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுகவினர் பொங்கல் வைக்கின்றனர். பொங்கல் பண்டிகையின் ஆன்மாவான, ஆன்மிகத்தை அதிலிருந்து அகற்ற துடிக்கின்றனர்.

பொங்கல் பண்டிகைக்கு எந்த பேதமும் கிடையாது. ஆனால், அது இந்து மத தத்துவத்தின் அடிப்படையில் நாடெங்கும் கொண்டாடப்படும் அறுவடைத்திருநாள். இதை தமிழர் திருநாளாக, தனிச்சிறப்புடன் உலகெங்கும் வாழும் தமிழர்கள் கொண்டாடுகின்றனர். பொங்கல் பண்டிகையின் பாரம்பரியத்தை அழிக்க துடிக்கும் சக்திகளுக்கு தோல்வியே கிடைக்கும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vanathi Srinivasan bjp condemn to dmk govt mk stalin pongal


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->