விஜய்க்கு வாழ்த்து... அரசியலுக்கு ‘நோ’ ...! - சிவகார்த்திகேயன் ஓப்பன் டாக்
Greetings Vijay No politics Sivakarthikeyan open talk
டெல்லியில் மத்திய அமைச்சர் எல்.முருகனின் இல்லத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில், ‘பராசக்தி’ திரைப்படக் குழுவினர் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த நடிகர் சிவகார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை முன்வைத்தனர்.

அதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன்,“உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்களுக்கு இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அனைவரிடமும் நேர்மறை சிந்தனைகள் பரவ வேண்டும். ‘பராசக்தி’ படத்தைச் சுற்றி எந்தவிதமான சர்ச்சையும் இல்லை.
மக்கள் படத்தை சரியான கோணத்தில் புரிந்துகொண்டுள்ளனர். எங்களுடைய நோக்கம் எதுவோ, அது மக்களை சென்றடைந்துள்ளது. படத்தை முழுமையாகப் பார்ப்பவர்கள் அதன் உண்மையான கருத்தை உணர்வார்கள்” என்றார்.
மேலும் அரசியல் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர்,“எனக்கு எந்தவிதமான பிரச்சார நோக்கமும் இல்லை; அதில் ஈடுபடும் எண்ணமும் இல்லை.
விஜய்யின் அரசியல் பயணத்திற்கு நான் தனிப்பட்ட முறையிலும், சமூக வலைதளங்களிலும் வாழ்த்து தெரிவித்துள்ளேன். அவரது ‘ஜன நாயகன்’ திரைப்படம் விரைவில் வெளியாகும்” எனத் தெரிவித்தார்.
English Summary
Greetings Vijay No politics Sivakarthikeyan open talk