விஜய் ரசிகர்களின் தனிநபர் தாக்குதல்: ‘குண்டர் கலாச்சாரம்’ என கடும் கண்டனம் தெரிவித்த சுதா கொங்கரா...! - Seithipunal
Seithipunal


விஜய் நடித்த ‘ஜன நாயகன்’ திரைப்படம் தணிக்கைச் சான்றிதழ் சிக்கலில் சிக்கி வெளியீடு தாமதமான நிலையில், அந்த ஏமாற்றத்தின் எதிரொலி ‘பராசக்தி’ படத்தை நோக்கி திருப்பப்படுவதாக இயக்குநர் சுதா கொங்கரா கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

‘பராசக்தி’ குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் பேசுகையில்,சிலர் திட்டமிட்டு சமூக வலைதளங்களில் விஷமம் பரப்பி, பெயரில்லா கணக்குகளின் பின்னால் இருந்து தனிநபர் தாக்குதல்களில் ஈடுபடுகிறார்கள் என குற்றம் சாட்டினார்.

இதுபோன்ற செயல்கள் குறித்து அவர் கூறியதாவது,“யார் செய்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் அடையாளம் மறைத்து, கீழ்த்தரமான அவதூறுகள் மற்றும் நபர் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.

இது மிக மோசமான மனநிலை” என்று தெரிவித்துள்ளார்.இதனுடன் தொடர்பாக எக்ஸ் (X) தளத்தில் செயல்படும் ‘Blasting Tamil Cinema’ என்ற பக்கத்தில் வெளியான ஒரு பதிவை மேற்கோள் காட்டிய அவர்,அதில்,"தணிக்கை குழுவிடம் சான்றிதழ் வாங்குவது பெரிய விஷயம் இல்லை.

விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டு “மன்னிப்புச் சான்றிதழ்” வாங்கினால் தான் #பராசக்தி ஓடும்’ என எழுதப்பட்டிருந்ததாக சுட்டிக்காட்டினார்.இந்த வகை பதிவுகள் ஒரு திரைப்படத்தை தடுக்கவே மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட தாக்குதல் என்றும்,இதை அவர் “ரவுடித்தனமும் குண்டர் கலாச்சாரமும்” என கடுமையான வார்த்தைகளில் விமர்சித்தார்.

மேலும் அவர் கூறுகையில்,“ஒரு படத்தின் வெற்றிக்காக மற்றொரு படத்தின் தோல்வியை விரும்புவது சினிமாவுக்கு கேடு. இப்படிப்பட்ட வெறுப்பு அரசியல் ரசிகர்களிடையே வளரக் கூடாது. ஆரோக்கியமான போட்டியே சினிமா உலகத்தை முன்னேற்றும்” என்று வலியுறுத்தினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Sudha Kongara strongly condemned personal attacks by Vijays fanscalling goon culture


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->