ஈரான், ரஷ்யா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கல் நிறுத்தம்; ட்ரம்ப் அரசு அதிரடி..!
The United States has suspended the issuance of immigration visas to 75 countries including Iran and Russia
ஈரான், ஈராக், ரஷ்யா, ஆப்கானிஸ்தான், பிரேசில், எகிப்து, நைஜீரியா உள்ளிட்ட 75 நாடுகளுக்கான குடியேற்ற விசா வழங்கலை அமெரிக்க அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. குறித்த நடவடிக்கை ஜனவரி 21 முதல் அமலுக்கு வரும் என, அமெரிக்க வெளியுறவுத் துறை உள்குறிப்பை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகம் ஒன்று செய்து வெளியிட்டுள்ளது.
தற்போதுள்ள சட்டங்களின் கீழ் விசாக்களை மறுக்குமாறு அமெரிக்க தூதரக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தெரிவிக்கப்பட்டுள்ளது. screening and vetting நடைமுறைகளை வெளியுறவுத் துறை மீளாய்வு செய்யும் காலப்பகுதியில் இவ்வாறு வீசாக்களை மறுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விசா இடைநிறுத்தத் திட்டங்களை அமெரிக்க வெளியுறவுத் துறை பேச்சாளர் ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால், இந்த முடிவுக்கான விரிவான காரணங்கள் அல்லது இடைநிறுத்தம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது குறித்து கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நடவடிக்கையானது, அமெரிக்காவின் குடியேற்ற மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் மேலும் கடுமையான அணுகுமுறை உருவாகி வருவதை சுட்டிக்காட்டுவதாக சர்வதேச அரசியல் வட்டாரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளன.
English Summary
The United States has suspended the issuance of immigration visas to 75 countries including Iran and Russia