திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி.!! - Seithipunal
Seithipunal


தமிழக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடிபழனிசாமி பரிசோதனைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் மாற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். தேர்தலுக்கு பிறகு திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவருக்கு குடலிறக்க அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. 

இந்நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் உள்ள எம் ஜி எ மருத்துவமனையில் இன்று மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே குடலிறக்கம் அறுவை சிகிச்சை செய்துள்ளதால் எண்டோஸ்கோபி  செய்து கொள்வதற்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi palanisamy admitted to hospital


கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?Advertisement

கருத்துக் கணிப்பு

உங்கள் கருத்து : தமிழ்ப் புத்தாண்டு எது?
Seithipunal