ஸ்டாலினை மடக்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.. கதிகலங்கிய திமுக..! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் உள்ளாட்சித் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்தில் பேசிய திமுக கொறடா சக்கரபாணி, 100 நாள் வேலை திட்டத்தில் மக்களுக்கு உரிய முறையில் பணம் வழங்கப்படுவதில்லை என குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி, மத்திய அரசின் திட்டத்திற்கான பணத்தை பயனாளிகளுக்கு வழங்கி வருகிறது. மாநில அரசுக்கு இதற்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்தார்.  

அதன் பிறகு பேசிய முதலமைச்சர், உள்ளாட்சி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறும் திமுக, விக்ரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத் தேர்தலில் தோல்வி அடைந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். பாராளுமன்ற தேர்தலில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து திமுக வெற்றி பெற்றதாக குற்றம்சாட்டினார். 

மக்கள் உண்மையை புரிந்து கொண்டதால் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றியை தந்ததாக கூறினார். வேலூர் தொகுதியில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெற்றதாகவும், அங்கு உள்ள 3 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக அதிக வாக்குகளை பெற்றதாகவும் அவர் கூறினார். அப்போது குறுக்கிட்டு பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின் மிக விரைவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியை பெற்று ஆட்சியை அமைக்கும் அமைக்கும்போது பாராளுமன்ற தேர்தலினின் போது கூறிய அனைத்து வாக்குறுதிகளையும் நிறைவேற்றப்படும் என கூறினார். 

2020ஆம் ஆண்டு நிறைவேற்றுவதற்காக வாக்குறுதிகளை பாராளுமன்ற தேர்தலில் போது ஏன் தெரிவித்தீர்கள் என முதலமைச்சர் கேள்வி எழுப்பினார். மேலும் 2021ஆம் ஆண்டு யாரை ஆட்சிக்கு கொண்டு வரவேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்வார்கள் என முதலமைச்சர் கூறினார். முதலமைச்சர் தொடர்ந்து பேசினார்.

அப்போது இடையூறு செய்த திமுக உறுப்பினர் ஆஸ்டினை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். மு க ஸ்டாலின், துரைமுருகன் உறுதியளித்ததை தொடர்ந்து ஆஸ்டினை வெளியேற்றும் உத்தரவு நிறுத்தி வைக்கப்பட்டது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

edappadi and stalin says about 2021 election


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal