செம ட்விஸ்ட்! முக்கிய புள்ளியை சுத்து போட்ட ED! கமலாலய ஊழியருக்கும் ஆப்பு! பதறும் தமிழக பாஜக! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் 40க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

அதேபோன்று சென்னை தி.நகரில் விஜய் அபார்ட்மெண்ட்ஸில் வசித்து வரும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் சண்முகம் வீட்டில் 5க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த நிலையில் திடீர் திருப்பமாக தென் சென்னை பாஜக மாவட்ட தலைவர் காளிதாசுக்கு சொந்தமான இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோன்று தமிழக பாஜக தலைமை அலுவலகமாக கமலாலயத்தை பணிபுரியும் ஜோதிமணி என்பவர் வீட்டிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

அமலாக்கத் க்ஷதுறை அதிகாரிகளுக்கு ரியல் எஸ்டேட் தொடர்பான பல்வேறு ஆவணங்கள் கிடைத்ததன் அடிப்படையில் இந்த சோதனையானது இன்று காலை முதல் நடைபெற்று வருவதாக தகவல்களை உள்ளது. மேலும் தஞ்சையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் சண்முகம் மற்றும் அவருக்கு தொடர்புடைய இடங்களிலும் அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனையானது மேலும் விரிவடைய கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ED raid ok n TN BJP district president house


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->