சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதித்த சபாநாயகர்! தடை வேண்டாம் என கேட்டுக்கொண்ட துரைமுருகன்! - Seithipunal
Seithipunal


அமலியில் ஈடுபட்ட எம்எல்ஏக்களுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானம்!

தமிழக சட்டப்பேரவையில் இரண்டாம் நாளான இன்று அதிமுகவைச் சேர்ந்த இரு அணி எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர். ஓ பன்னீர்செல்வம் எதிர்க்கட்சித் துணைத் தலைவருக்கான இருக்கையில் அமர்ந்தார். அப்பொழுது சபாநாயகருக்கு எதிராக இபிஎஸ் அணியினர் கோஷம் எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து கடும் அமலியில் ஈடுபட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டப்பேரவையின் மையத்தில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக சட்டமன்ற தலைவர் அப்பாவு சட்டப்பேரவையின் மையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களையும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றுமாறு அவை காவலர்களுக்கு உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

இபிஎஸ் அணியைச் சேர்ந்த அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவையில் இருந்து வெளியேற்றப்பட்ட பின் சபாநாயகர் அமலியில் ஈடுபட்ட அனைத்து எம்எல்ஏக்களும் சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பங்கேற்க தடை விதிப்பதாக அறிவித்தார். அப்பொழுது பேசிய அமைச்சர் துரைமுருகன் நடந்தவை நடந்ததாகவே இருக்கட்டும். எனவே அமலில் ஈடுபட்ட சட்டமன்ற உறுப்பினர்களை இன்று ஒரு நாள் மட்டும் தடை விதித்து நாளை நடைபெறும் சட்டமன்ற கூட்டத்தில் அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இதனை அடுத்து அமலில் ஈடுபட்ட அதிமுக எம்எல்ஏக்கள் மீதான தீர்மானம் அமைச்சர் துரைமுருகனால் கொண்டுவரப்பட்டது. அந்த தீர்மானத்தை வாசித்த துரைமுருகன் "சட்டப்பேரவை மாண்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்ட அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களையும் இன்று ஒரு நாள் சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க தடை விதிக்கப்படுகிறது" என தீர்மானம் கொண்டு வந்தார். இதனைத் தொடர்ந்து சபாநாயகர் தீர்மானத்தை வழிமொழிய சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனால் இபிஎஸ் அணியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் இன்று ஒரு நாள் சட்டசபையில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Duraimurugan resolution was brought against the ADMK MLAs


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->