23-ஆம் தேதி சென்னை வரும் பிரதமர் மோடி; மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் Red Zone-ஆக அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 23-ஆம் தேதி தமிழகம் வரவுள்ளார். இதனையொட்டி சென்னை மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. 

தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்த நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தில் வரும் 23 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வெள்ளிக்கிழமை தினமான அன்று மிகப்பெரிய அளவில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கலந்துக் கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வருகிறார். இந்த பொது கூட்டத்தில் கலந்துகொள்ளும் மோடி, கூட்டணிக் கட்சி தலைவர்கள் மத்தியில் சிறப்புரை ஆற்றவுள்ளார்.

மோடியின் வருகையையொட்டி, பாதுகாப்பு காரணங்களுக்காக சென்னையில் மீனம்பாக்கம் மற்றும் கிண்டி ஆகிய பகுதிகள் Red Zone-ஆக அறிவிக்கப்பட்டுள்ளன. அத்துடன், இந்த பகுதியில், டிரோன் கேமராக்கள், ஆளில்லா வான்வழி கருவிகள், ஹாட் ஏர் பலூன்கள் உள்ளிட்டவற்றை பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளன. 

மேலும், 23-ஆம் தேதி பிரதமருடன் பொதுக்கூட்ட மேடையில் கூட்டணியில் இடம்பெறும் தலைவர்களையும் பங்கேற்க வைக்க பாஜக திட்டமிட்டுள்ளது. அதன்படி, வரும் 22-ஆம் தேதிக்குள் கூட்டணியை இறுதி செய்யும் நடவடிக்கையில், பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அந்த வகையில், நாளை சென்னை வரும் பியூஸ் கோயல் தேமுதிக தலைவர்களை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியுள்ளது. அத்துடன் அவர், டிடிவி தினகரனையும் சந்திக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Due to Prime Minister Modis visit on the 23rd the Meenambakkam and Guindy areas have been declared Red Zones


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->