இது தான் திராவிட மாடல் ஆட்சியா! தமிழகத்தில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமைகளை திராணியற்று வேடிக்கை பார்க்கும் திமுக...! - EPS - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ''எடப்பாடி பழனிசாமி'' அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் பகுதியில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான பெண்ணுக்கு உரிய நீதி கிடைத்திடவும்; பாலியல் குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை கிடைத்திடவும்; தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை தடுக்கத் திராணியற்று வேடிக்கை பார்த்து வரும் தி.மு.க. அரசைக் கண்டித்தும், அ.தி.மு.க. தஞ்சாவூர் மாநகரத்தின் சார்பில், 23-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணியளவில், தஞ்சாவூர் புதிய தபால் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக புரட்சித் தலைவி பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதயகுமார் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர்களான காந்தி, துரை. செந்தில், தஞ்சாவூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர் பாரதி மோகன், தஞ்சாவூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் ரெத்தினசாமி, தஞ்சாவூர் மத்திய மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சேகர், தஞ்சாவூர் மாநகரக் கழகச் செயலாளர் சரவணன் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dravidian model government DMK is watching increasing harassment assaultsTN with impunity EPS


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->