டெல்லியில் அதிரடி திருப்பம்...! இன்று மாலை சோனியா, ராகுலை சந்திக்கிறார் தமிழக முதல்வர் விஜய்...! - கூட்டணியில் புதிய அத்தியாயமா...? - Seithipunal
Seithipunal


தேசிய வளர்ச்சி, மாநிலங்களின் முன்னேற்றத் திட்டங்கள் மற்றும் கொள்கை ஆலோசனைகள் குறித்து விவாதிக்க டெல்லியில் நாளை நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க தமிழக முதலமைச்சர் விஜய் இன்று தலைநகர் டெல்லி பயணம் மேற்கொண்டார்.

இதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை சுமார் 10 மணியளவில் தனி விமானம் மூலம் அவர் டெல்லி புறப்பட்டுச் சென்றார். நாட்டின் அனைத்து மாநில முதலமைச்சர்களும் பங்கேற்கும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி தலைமை தாங்குகிறார்.

இந்த நிலையில், டெல்லி அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, தமிழக முதலமைச்சர் விஜய் இன்று மாலை காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியை நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து மாலை சுமார் 6.30 மணியளவில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சந்திப்பில் தேசிய அரசியல் சூழ்நிலை, கூட்டணி தொடர்பான விவகாரங்கள், மாநில நலன் சார்ந்த கோரிக்கைகள் மற்றும் எதிர்கால அரசியல் நகர்வுகள் குறித்து விவாதிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் அரங்கில் நிலவி வருகிறது.

குறிப்பாக, த.வெ.க. தலைமையிலான கூட்டணி ஆட்சி தமிழகத்தில் பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்களை முதலமைச்சர் விஜய் நேரில் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறை என்பதால் இந்த சந்திப்பு கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால், டெல்லியில் நடைபெறவுள்ள இந்த அரசியல் சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரங்களிலும் தமிழக அரசியல் களத்திலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dramatic twist Delhi Tamil Nadu Chief Minister Vijay meet Sonia and Rahul evening new chapter alliance


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->