'உள்ளாட்சியில் மறுமலர்ச்சி' மக்களுக்கான விழிப்புணர்வு.. அரசே பொறுப்பு.. Dr.அன்புமணி ராமதாஸ் திட்டவட்டம்.! - Seithipunal
Seithipunal


வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்பது அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருக்கிறது. இது குறித்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய கடமை தமிழக அரசுக்கு இருப்பதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், "சென்னை மாநகராட்சியில் ஒவ்வொரு பகுதிக்குமான திட்டங்களை அப்பகுதி மக்களே தீர்மானிக்கும் வகையில் தமிழக அரசு அறிவித்துள்ள வார்டு கமிட்டி, ஏரியா சபைகள் குறித்து 90% மாமன்ற உறுப்பினர்களுக்கு தெரியவில்லை என்று வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சி அளிக்கின்றன. 

வார்டு கமிட்டி தலைவராக அந்தந்த வட்டங்களுக்கான மாமன்ற உறுப்பினர்கள் தான் இருப்பார்கள். அவர்களுக்கே இது குறித்த விவரங்களும், அதிகார வரம்புகளும் தெரியவில்லை என்றால், அந்த அமைப்புகளை அவர்கள் எவ்வாறு வழிநடத்துவார்கள் என்ற வினா எழுகிறது. 

சென்னையில் மட்டுமின்றி, தமிழகத்தின் அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் இதே நிலை தான் காணப்படுகிறது. இந்த அமைப்புகள் தமிழகத்தில் இப்போது தான் முதன்முறையாக கொண்டு வரப்படுகின்றன என்பதால் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு புரிதல் இல்லாமல் இருக்கலாம்.

கிராம சபைகளுக்கு இணையான, சில விஷயங்களில் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவை வார்டு கமிட்டி - ஏரியா சபைகள். உள்ளாட்சியில் புதிய மறுமலர்ச்சியை ஏற்படுத்தப் போகும் இந்த அமைப்புகள் குறித்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், மக்களுக்கும் அரசு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr anbumani Ramadoss Tweet about local Govt bodies


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->