போலிச் சான்றிதழ் பெரியசாமியை சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் நியமிப்பதா? அன்புமணி இராமதாஸ் கண்டனம்! - Seithipunal
Seithipunal



மோசடி குற்றச்சாட்டின் அடிப்படையில் விசாரணை வளையத்தில் உள்ள பெரியார் பல்கலைக்கழக  பேராசிரியரை சாகித்ய அகாடமி பொதுக்குழுவில் நியமிப்பதா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த அவரின் கண்டன செய்திக்குறிப்பில், "சாகித்ய அகாடமியின் பொதுக்குழு உறுப்பினராக சேலம் பெரியார் பல்கலைக்கழக பேராசிரியர் பெரியசாமி நியமிக்கப்பட்டிருக்கிறார். இது கண்டிக்கத் தக்கது.

பேராசிரியர் பெரியசாமி போலிச் சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்தது குறித்த புகார் மீது தமிழக அரசு குழு அமைத்து விசாரணை நடத்தி வருகிறது. 

இப்படிப்பட்ட ஒருவரை பொதுக்குழு உறுப்பினராக நியமித்தால், அது சாகித்ய அகாடமியின் மதிப்பைக் குறைத்துவிடும்.

சாகித்ய அகாடமி பொதுக்குழு உறுப்பினர் பதவியிலிருந்து பேராசிரியர் பெரியசாமியை நீக்க வேண்டும்.

அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த தமிழ்நாடு அரசின்  விசாரணையை விரைந்து நடத்தி, சட்டப்படி அவர் தண்டிக்கப்பட வேண்டும்" என்று அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Dr Anbumani Ramadoss Condemn Periyasami issue


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->