விஜய் எங்கே போட்டியிடுகிறார் தெரியுமா...? சர்வே சொன்ன 3 ‘வெற்றி நிச்சயம்’ தொகுதிகள்...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் உள்ள 234 சட்டசபைத் தொகுதிகளுக்கும் வரும் ஏப்ரல் 2026-ல் தேர்தல் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த முறை நான்கு முனைப் போட்டி சூடான அரசியல் நிலையை உருவாக்கியுள்ளது, திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம், மேலும் சீமானின் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளது.

முதன்முறையாக சட்டசபைத் தேர்தலில் களமிறங்கும் விஜயின் தமிழக வெற்றிக் கழகம், முதல் தடவையிலேயே வலுவான முன்னிலைப் பெற தீர்மானித்துள்ளது. “கூட்டணி அமைத்த கட்சிகளுக்கு ஆட்சிப்பங்கும் தருவோம்” என தெரிவித்திருந்தாலும், இதுவரை கூட்டணி விவாதங்கள் ஆரம்பிக்கப்படவில்லை.
விஜய்க்கு ‘வெற்றி உறுதி’ என அடையாளம் காணப்பட்ட 3 தொகுதிகள்  கூட்டணிக்கான பேச்சுவார்த்தைகள் ஒரு புறம் நடந்துகொண்டிருக்க, மறுபுறம் விஜய் எந்தத் தொகுதியில் போட்டியிட்டால் வெற்றி உறுதி கிடைக்கும் என்பதற்காக கட்சியின் வியூகவாதிகள் விரிவான சர்வே ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

அதன் பேரில் மூன்று முக்கியமான தொகுதிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன:
திருச்சி கிழக்கு
மதுரை மேற்கு
திருவாடானை
இந்த மூன்று தொகுதிகளிலும் தற்போதைய எம்.எல்.ஏ.க்கள்:
திருச்சி கிழக்கு – திமுகவின் இனிகோ இருதயராஜ்
மதுரை மேற்கு – அதிமுகவின் முன்னாள் அமைச்சர் கே. செல்லூர் ராஜூ
திருவாடானை – காங்கிரஸின் எஸ்.எம். கருமாணிக்கம்
விஜய்யின் ‘ஃபேவரிட்’ எது? — திருச்சி கிழக்கு முன்னிலை!
சர்வே கணிப்பின்படி, திருச்சி கிழக்கில் சிறுபான்மையினர் வாக்குகள் அதிகம் இருப்பதும், அங்கு விஜய்க்கு இயல்பான ஆதரவு நிலவி வருவதும் காரணமாக, அந்தத் தொகுதி முதன்மையான இலக்காக அமைந்திருக்கலாம் என்று கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும், விஜய் தனது மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை திருச்சியிலிருந்து தொடங்கியதும், அவர் பிரசாரம் செய்த காந்தி மார்க்கெட் — திருச்சி கிழக்கு தொகுதிக்குள் வருவதும் இந்த ஊகத்துக்கு வலு சேர்த்துள்ளது.2026 தேர்தலுக்கான சூழல் சூடுபிடித்துள்ள நிலையில், விஜய் எந்தத் தொகுதியைத் தேர்வு செய்கிறார் என்பது தற்போது தமிழக அரசியலில் பெரிய கேள்வியாக மாறியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know where Vijay contesting 3 sure win constituencies that survey said


கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?



Advertisement

கருத்துக் கணிப்பு

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அரசியல் செய்வது யார்?




Seithipunal
--> -->