234 தொகுதிகளுக்கும் கட்டணமில்லா மனு! காங்கிரஸ் புதிய அறிவிப்பு – கடைசி தேதி நீண்டது!
Free petition all 234 constituencies Congress new announcement last date extended
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்க, காங்கிரஸ் கட்சியும் தனது தேர்தல் ஆயத்தங்களை வேகப்படுத்தியுள்ளது. மாநிலத்தின் 234 சட்டமன்றத் தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் கட்சியினரிடமிருந்து விருப்ப மனுக்களை வரவேற்கும் அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டிருந்தது.

அந்த அறிவிப்பில், 2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் உறுப்பினர்கள், டிசம்பர் 15-ஆம் தேதி வரை தலைமை அலுவலகம் அல்லது மாவட்ட காங்கிரஸ் அலுவலகங்களில் இருந்து கட்டணமில்லா விருப்ப மனு படிவத்தை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டது.
நேரில் வர முடியாதவர்கள் நியமிக்கப்பட்ட இணையதள முகவரியில் இருந்து மனுபடிவத்தை பதிவிறக்கம் செய்யும் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இந்த படிவத்தைப் பெற்றவர்கள், தாங்கள் போட்டியிட விரும்பும் தொகுதியை தெளிவாக குறிப்பிடுவதோடு, கேட்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் முழுமையாக பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களையும் இணைத்து, மாலை 5 மணிக்குள் சத்தியமூர்த்தி பவன் அல்லது சம்பந்தப்பட்ட மாவட்ட அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இன்று வெளியான புதிய அறிவிப்பு – கடைசி தேதி நீட்டிப்பு!
இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதில்,"234 தொகுதிகளுக்கும் மனு பெறுவது டிசம்பர் 15 வரை என்பதே முன்னதாக இருந்த திட்டம்,ஆனால் அதிகமான விண்ணப்பத்தாரர்கள் மற்றும் தயாரிப்பு காரணங்களால்.
பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனு படிவங்களைச் சமர்ப்பிக்கும் கடைசி தேதி டிசம்பர் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது"என்று தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளது.இத்தீர்மானம், தேர்தலை நோக்கி காங்கிரஸ் கட்சி தீவிரமாக முன்னேறி வருவதை வெளிப்படுத்துவது மட்டுமின்றி, கட்சிக்குள் அதிக போட்டியை உருவாக்கும் வாய்ப்பும் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.
English Summary
Free petition all 234 constituencies Congress new announcement last date extended