பெண்கள் கவனத்திற்கு! இன்று தங்கம் விலை ஏற்றம்...ஆனால் புது சாதனை படைத்த வெள்ளி...!
Attention ladies Gold prices rise today but silver sets new record
கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் ₹97,600 என புதிய உச்சத்தை தொட்டது. பின்னர் விலை தாறுமாறாக சரிந்தாலும், கடந்த சில நாட்களாக மீண்டும் உயர்வை நோக்கி நகர்ந்து வருகிறது.
நேற்று சென்னை சந்தையில் தங்கம் விலை கிராமுக்கு ₹40 குறைந்து ₹12,000-க்கும், சவரன் ₹320 குறைந்து ₹96,000-க்கும் விற்பனையானது. அதே சமயம் வெள்ளி விலை ஒரு கிலோக்கு ₹1,000 உயர்ந்து ₹1,99,000 என்ற நிலையை எட்டியது.

இன்று தங்கம் – மீண்டும் ஏற்றம்!
இன்று தங்கம் விலை சற்றே உயர்வை பதிவு செய்துள்ளது.
கிராம்: ₹30 உயர்ந்து ₹12,030
சவரன்: ₹240 உயர்ந்து ₹96,240
வெள்ளி – வரலாற்று உச்சம்!
வெள்ளி விலை இன்று அதிர்ச்சி அளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
கிராம்: ₹8 உயர்ந்து ₹207
கிலோ: ₹8,000 உயர்ந்து ₹2,07,000
இது கடந்த காலங்களில் அரிதாகவே காணப்பட்ட உயர்வு.
கடந்த 10 நாட்களின் தங்கம் விலை நிலவரம்:
10.12.2025: ₹96,240
09.12.2025: ₹96,000
08.12.2025: ₹96,320
07.12.2025: ₹96,320
06.12.2025: ₹96,320
05.12.2025: ₹96,000
04.12.2025: ₹96,160
03.12.2025: ₹96,480
02.12.2025: ₹96,320
01.12.2025: ₹96,560
English Summary
Attention ladies Gold prices rise today but silver sets new record