வக்கில்லையா ஸ்டாலினுக்கு., வெட்கமில்லையா திமுகவுக்கு., வச்சு செய்யும் பாமக.! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் காலியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கும், விடுபட்ட ஒன்பது மாவட்டங்களுக்கும்  உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக நடந்து முடிந்துள்ளது. இதில், கடலூர் மாவட்டம், குமராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட 19வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் தேர்தலும் நடைபெற்றது.

 

இந்த தேர்தலில் திமுக சார்பாக சங்கர் என்பவர் களமிறக்கப்பட்டார். சங்கருக்கு எதிராக அதிமுக சார்பிலும், பாமக சார்பில் வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்ட நிலையில், திமுகவின் தேர்தல் பிரச்சார சுவரொட்டிகளில், பாமகவின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், வன்னியர் சங்கத் தலைவருமான காடுவெட்டி குரு அவர்களின் புகைப்படத்தை பயன்படுத்தி திமுக வாக்கு பிச்சை வாக்கு கேட்டு உள்ளனர்.

இதற்கு பாமக தரப்பிலும், மற்ற அரசியல் கட்சிகள் தரப்பிலும்., "திமுகவுக்கு சொந்த கட்சி தலைவர்களை வைத்து ஒட்டு கேட்க வக்கில்லையா? அடுத்த கட்சியின் தலைவரை உங்கள் கட்சியின் போஸ்டர்கள் ஒட்ட உங்களுக்கு வெட்கம் இல்லையா? என்று சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

திமுகவின் வேட்பாளர் சங்கரை ஆதரித்து, தற்போது வேளாண் துறை அமைச்சராக இருக்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தின் வாரிசு (மகன்) கதிரவன் பிரச்சாரம் மேற்கொண்டார். அவரின் பிரச்சாரத்தை குறிப்பிட்டு பதிவிட்டுள்ள சிலர், "நியாயம் தானா., நியாயம் தானா., பாமக தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் படத்தை பயன்படுத்தி ஓட்டுவது நியாயம்தானா? என்று கேள்வி எழுப்பி உள்ளனர். மேலும், கடலூர் தெற்கு திமுகவுக்கு வெட்கக்கேடு என்று ஆங்கிலத்தில் பதிவிட்டுள்ளனர்.

மற்றொருவர் "வக்கில்லையா., வக்கில்லையா., ஸ்டாலின் படம் போட்டு ஓட்டு கேட்க வக்கில்லையா.,

மாவீரன் காடுவெட்டி குரு மற்றும் பாமக பொறுப்பாளர் ஜெகன் பன்னீர்செல்வம் புகைப்படத்தை பயன்படுத்தினால் அசிங்கமாக கேட்போம்" என்றும் பதிவிட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dmk use kaduvetti guru pic


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->