திமுக முப்பெரும் விழா விருதுகள்! யாருக்கு என்ன விருது? முழு விவரம் இதோ!
DMK triple jubilee awards announced
மறைந்த தமிழக முதலமைச்சரும் திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழா தமிழக அரசால் இந்த ஆண்டு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திமுக தொடங்கி 75 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் பவள விழா ஆண்டும் கொண்டாடப்படுகிறது.
இதற்காக திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நலத்திட்ட உதவிகள் நடைபெற்று வரும் நிலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா மற்றும் திமுகவின் பவள விழா ஆண்டை முன்னிட்டு வேலூரில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. இந்த விழாவில் திமுக சார்பில் வழங்கப்படும் விருதுகளை வழங்குவோரின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் "தமிழினத் தலைவர் கலைஞர் நூற்றாண்டு விழா-திமுக பவள விழா ஆண்டு, 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 17 ஆம் நாள் வேலூரில் நடைபெறும் திமுக கழக முப்பெரும் விழாவினை ஒட்டி ஆண்டுதோறும் வழங்கப்படுகின்ற விருதுகளான
பெரியார் விருது - மயிலாடுதுறை திரு. கீ.சத்தியசீலன்
அண்ணா விருது - மீஞ்சூர் திரு. க.சுந்தரம்
கலைஞர் விருது - மாண்புமிகு ஐ.பெரியசாமி
பாவேந்தர் விருது - தென்காசி திருமதி. மல்லிகா கதிரவன்
பேராசிரியர் விருது - பெங்களூர் திரு ந.ராமசாமி ஆகியோருக்கு வழங்கப்படும் எனது திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.
English Summary
DMK triple jubilee awards announced