குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் சிக்கியது... செந்தில் பாலாஜி மீது பாய்ந்த வழக்கு... லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை!
dmk senthilbalaji tasmac scam dvac case
லஞ்ச ஒழிப்பு துறை தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையால் அரசிடமிருந்து பெறப்பட்ட கடித இணைப்புகளில் கண்ட சங்கதிகளின் அடிப்படையில் அதன் உண்மை தண்மை சரிபார்க்கப்பட்டு பிடிக்கக்கூடிய குற்றம் புரிந்ததற்கான முகாந்திரம் இருந்ததால் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெற்ற முறைகேடுகளுக்குறிய அடிப்படை ஆதாரத்தின் அடிப்படையில் 28.07.2026 அன்று ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமையக குற்ற எண்.5/2026 பிரிவு 120 (ஆ), 167, 409, 109, 420 இந்திய தண்டணைச் சட்டம், 61(2), 201, 316 (5) பாரதிய நியாய சன்ஹிதா 2023, 13(2), r/w 13 (1)(a), 7lc, r/w 12 ஊழல் தடுப்பு சட்டம் 1988ல் திருத்தப்பட்ட ஊழல் தடுப்பு திருத்த சட்டம் 2018-ன் படி,
முன்னாள் மின்சாரம் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி, முன்னாள் டாஸ்மாக் மேலான்மை இயக்குநர் எஸ்.விசாகன், இ.ஆ.ப, டாஸ்மாக் அதிகாரிகள் திரு.ராமதுரை முருகன், பன்னீர் செல்வம், பாஸ்கர், நேர்முக உதவியாளர், வி.செந்தில் பாலாஜியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ரதேஷ் மற்றும் .கார்த்திக், தனி நபர்கள் மற்றும் மதுபான உற்பத்தி ஆலை, சரக்கு உரிமம் பெற்ற நிறுவனங்கள், பாட்டில் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத பிற டாஸ்மாக் அரசு ஊழியர்கள் ஆகியோருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு புலனாய்வு மேற்கொள்ளப்பட்டது.
புலனாய்வின் பகுதியாக இன்று 45 இடங்களில், முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட எதிரிகளின் வீடு, இருப்பிடம் மற்றும் மதுபான ஆலைகள், பாட்டில் நிறுவனங்கள், டாஸ்மாக் சரக்குகளை கையாளும் போக்குவரத்து நிறுவனங்கள், மாவட்ட டாஸ்மாக் அலுவலகங்களில் சோதனை நடத்தப்பட்டது. சோதனையில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள், டிஜிட்டல் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது.
ஒரு இடத்தில் உரிமையாளர் சோதனை சமயத்தில் இல்லாததால் அவ்விடத்தில் குற்றம் புரிந்ததற்கான ஆவணங்கள் / சாட்சியங்கள் மறைத்து வைத்திருக்கககூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் இருந்ததால் அவ்விடத்தை வருவாய் துறை அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டுள்ளது. புலனாய்வு தொடர்ந்து நடைபெறுகிறது.
English Summary
dmk senthilbalaji tasmac scam dvac case