ஏழை, எளிய மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தான் மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது - ஆர்.எஸ்.பாரதி - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் தற்போது புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. அதன்படி, 2027 வரை புதிய மின் கட்டண உயர்வு அமலில் இருக்கும் எனவும் தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது தான் மின் கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த மின்கட்டண உயர்வுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மின்கட்டண உயர்வு குறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி விளக்கம் அளித்துள்ளார். அதன்படி, மின் கட்டணம் குறித்து அவர் பேசியதாவது,  "மின்கட்டணத்தை உயர்த்தவில்லை என்று சொல்லவில்லை. ஆனால், அது ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில்தான் செய்யப்பட்டுள்ளது. இருப்பவர்களிடம் எடுத்து இல்லாதவர்களிடம் கொடுக்க வேண்டும் என அண்ணா சொன்னதைப்போலச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK RS Bharathi speech about electcity bill hike


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->