நாளை மறுநாள் திமுக எம்.பி.க்கள் கூட்டம்!
DMK MPs Meet Mk Stalin
திமுக மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான கூட்டம் செப்டம்பர் 23ஆம் தேதி சென்னையில் நடைபெற உள்ளது.
அக்கட்சியின் பொதுச்செயலர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், இந்த கூட்டம் காலை 10 மணி அளவில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள முரசொலி மாறன் வளாக கூட்ட அரங்கில் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
திமுக தலைவர் மற்றும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பாராளுமன்றத்தில் கட்சி பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகள், வரவிருக்கும் சட்ட மசோதாக்கள், மத்திய அரசின் கொள்கைகள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் விவாதங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவை மற்றும் மாநிலங்களவை திமுக உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவிப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.