“விஜயம் யாரும் செய்யலாம்…ஆனால் ஜெயம் உங்களது கைகளில்தான் உள்ளது..ஆனால் நான்தான் 2026-இல் CM!- பார்த்திபன்!
Anyone can win but victory is in your hands but I will be the CM in 2026 Parthiban
தனுஷ் இயக்கி, நடித்து வரும் ‘இட்லி கடை’ திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி பிரம்மாண்டமாக திரைக்கு வர இருக்கிறது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று கோவையில் உள்ள மாலில் இப்படத்தின் டிரைலர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் நேரில் வந்து அந்த விழாவை கொண்டாடியதால், நிகழ்ச்சி திருவிழாவாக மாறியது.
இந்த விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் பார்த்திபன், ரசிகர்களை கவர்ந்த உரையை நிகழ்த்தினார். அவர்,“விஜயம் யாரும் செய்யலாம்… ஆனால் ஜெயம் உங்களது கைகளில்தான் உள்ளது. ஆனால் நான்தான் 2026-இல் CM!”
என்று கவிதை வடிவில் பேசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.
இந்த வரிகளில் அவர் நடிகர் விஜயை மறைமுகமாக குறிக்கின்றார் என்று ரசிகர்கள் புரிந்து கொண்டனர். தற்போது ‘தமிழக வெற்றிக்கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, அரசியலில் செயல்பட்டு வரும் விஜயை குறிப்பிட்டே பார்த்திபன் பேசியதாக கருதப்படுகிறது.
இதனால் ‘இட்லி கடை’ டிரைலர் வெளியீட்டு விழாவே அரசியல் கலந்த பரபரப்புடன் நிறைவடைந்தது.
English Summary
Anyone can win but victory is in your hands but I will be the CM in 2026 Parthiban