காந்தாரா சாப்டர் 1 படத்தின் டிரெய்லர் ரெடி... ரிலீஸ் தேதியுடன் ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்!
The trailer of the film Gandhara Chapter 1 is ready A big surprise for fans with the release date
கன்னடத் திரையுலகம் உலகம் முழுவதும் பேசப்படும் நிலையில், அந்த வரிசையில் காந்தாரா படமே பெரும் மைல்கல்லாக இருந்தது. ரிஷப் ஷெட்டி நடித்தும், இயக்கியும் வெளியான காந்தாரா, குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும், நூற்றுக்கணக்கான கோடிகள் வசூல் செய்து, இந்திய சினிமாவின் தரத்தை உலகமே கவனிக்க வைத்தது.
இப்போது அதே படத்தின் இரண்டாம் பாகமான காந்தாரா சாப்டர் 1 பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. படப்பிடிப்பு முடிந்து, அக்டோபர் 2ஆம் தேதி உலகமெங்கும் ரிலீஸ் செய்யத் தயாராகியுள்ளது. கன்னட சினிமாவில் இருந்து அடுத்த 1000 கோடி படமாக இது உருவாகும் என்ற பெரும் எதிர்பார்ப்பு ஏற்கனவே எழுந்துள்ளது.
இதற்கிடையில், ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த ஒரு முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. காந்தாரா சாப்டர் 1 திரைப்படத்தின் டிரெய்லர் வருகிற செப்டம்பர் 22ஆம் தேதி மதியம் 12:45 மணிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த டிரெய்லரில் பிரம்மாண்ட காட்சிகள், அசுர விருந்தாக காட்சிப்படுத்தப்படும் என்று கோலிவுட், பாலிவுட், டாலிவுட் என அனைத்துத் துறையினரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
சுவாரஸ்யமாக, காந்தாரா சாப்டர் 1-க்கு நேரடியான போட்டியாக தமிழில் தனுஷ் இயக்கியும் நடித்தும் இருக்கும் இட்லி கடை படம் அக்டோபர் 1ஆம் தேதி வெளியாகிறது. இரண்டு படங்களும் ரசிகர்களுக்கு தனித்துவமான திரைப் பரிமாணங்களை அளிக்கப்போகின்றன.
English Summary
The trailer of the film Gandhara Chapter 1 is ready A big surprise for fans with the release date