ஆசிய கோப்பை : இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மீண்டும் மோதல் - Seithipunal
Seithipunal


ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் 17-வது ஆசியக் கோப்பை T20 தொடரின் சூப்பர் 4 சுற்றில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா – பாகிஸ்தான் மோதல் அரங்கேறுகிறது.

லீக் சுற்றை எளிதாக வென்று, தோல்வியின்றி முதலிடத்தில் நுழைந்த இந்திய அணி, சூப்பர் 4-ல் வெற்றியைத் தொடரும் நோக்கத்தில் களம் இறங்குகிறது. லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வெறும் 127 ரன்களில் கட்டுப்படுத்தி, இலக்கை 15.5 ஓவர்களில் எட்டியிருந்ததால், அணி கூடுதல் நம்பிக்கையோடு உள்ளது.

இந்திய அணியின் வலிமை:

பேட்டிங்: அபிஷேக் ஷர்மா, சுப்மன் கில், கேப்டன் சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சஞ்சு சாம்சன்.பந்து வீச்சு: பும்ரா, குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி.ஆல்-ரவுண்டர்கள்: ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் பட்டேல், ஷிவம் துபே.அக்ஷர் பட்டேல் காயம் காரணமாக விளையாடுவாரா என்பது சந்தேகமாக உள்ளது. அவர் இல்லாதால் அணிக்கு இழப்பாகும்.

பாகிஸ்தான் அணியின் நிலை:கேப்டன் சல்மான் ஆஹா தலைமையில், 2 வெற்றியுடன் (ஓமன், UAE) அடுத்த சுற்றுக்கு வந்தது.ஆனால் தொடக்க வீரர் சைம் அயூப் தொடர்ச்சியாக டக்-அவுட் ஆகி ஏமாற்றம் அளித்துள்ளார்.மிடில் ஆர்டர் பலவீனமாயிருந்தாலும், பந்து வீச்சில் ஷஹீன் ஷா அப்ரிடி, ஹாரிஸ் ரவுப், அப்ரார் அகமது நல்ல நிலையில் உள்ளனர்.

 இரு அணிகளும் சர்வதேச T20-யில் இதுவரை 14 முறை மோதியுள்ளன. இந்தியா – 11 வெற்றி, பாகிஸ்தான் – 3 வெற்றி.

சர்ச்சைகள், புறக்கணிப்பு மிரட்டல்களுக்கு பிறகு நடைபெறும் இந்த மோதல் ரசிகர்களை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.

 துபாயில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 8 மணிக்கு துவங்குகிறது. நேரடி ஒளிபரப்பு – Sony Sports 1, 4, 5 சேனல்கள். பலத்த எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த மோதலில், நெருக்கடியை சமாளிக்கும் அணி கையே வெற்றி பெறும் என சொல்லலாம்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Asia Cup India Pakistan clash again today


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->