தனுஷ் பட நிகழ்ச்சியில் பரபரப்பு – ரசிகர் மேடையேறி தனுஷை கட்டிப்பிடித்த சம்பவம்
There was a commotion at Dhanush film event a fan went on stage and hugged Dhanush
தனுஷ் இயக்கியும், நாயகனாகவும் நடித்துள்ள “இட்லி கடை” திரைப்படம் வரும் அக்டோபர் 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதில் நித்யா மேனன், சத்யராஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, நேற்று கோவையில் உள்ள ஒரு மாலில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா நடந்தது. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கூடி, தங்களின் பிரியமான நட்சத்திரத்தை நேரில் காண ஆர்வமாகக் காத்திருந்தனர்.
நிகழ்ச்சியில் நடிகர் தனுஷ் உரையாற்றிக் கொண்டிருக்கும் வேளையில், பாதுகாப்பு வளையத்தை மீறி, திடீரென ஒரு ரசிகர் மேடையேறினார். அவர் நேராக சென்று தனுஷை கட்டிப்பிடித்ததால், சில நொடிகள் பரபரப்பு நிலவியது.
அந்த ரசிகர் “ஒரே ஒரு ஃபோட்டோ…” என்று கோரியதற்கு, தனுஷ் அமைதியாக சிரித்து, அவருடன் புகைப்படம் எடுத்து ரசிகரின் மனதை கவர்ந்தார். பின்னர், பவுன்சர்கள் அந்த ரசிகரை நிதானமாக அங்கிருந்து அழைத்து சென்றனர்.
இந்தச் சம்பவம் நிகழ்ச்சியில் சிறிது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும், தனுஷின் அமைதியான அணுகுமுறை காரணமாக ரசிகர்களும் திருப்தியடைந்து, விழா மீண்டும் சீரான சூழலில் நடைபெற்றது.
English Summary
There was a commotion at Dhanush film event a fan went on stage and hugged Dhanush