பிசிசிஐ தலைவராக சி.எஸ்.கே முன்னாள் வீரர் மிதுன் மனாஸ்..?!
BCCI president CSK midhun
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) தலைவராக இருந்த ரோஜர் பின்னி, 70 வயதில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
இதனால் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா தற்காலிக தலைவராக பொறுப்பேற்றுள்ளார். புதிய தலைவரை தேர்வு செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
முன்னதாக கிரிக்கெட் லெஜண்ட் சச்சின் தெண்டுல்கர் பெயர் பரவலாக பேசப்பட்டாலும் அது வதந்தி என பின்னர் தெளிவுபடுத்தப்பட்டது. இந்நிலையில் பி.சி.சி.ஐ. தலைவராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரர் மிதுன் மனாஸ் நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளிவந்துள்ளது.
டெல்லியில் நேற்று நடந்த முக்கிய ஆலோசனை கூட்டத்தில் காலியாக உள்ள பதவிகள் குறித்து விவாதம் நடந்தது. இதில் மிதுன் மனாஸ் மற்றும் கர்நாடக கிரிக்கெட் சங்கத் தலைவர் ரகுராம் பட் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நம்பத்தகுந்த வட்டாரங்களின் தகவலின்படி, தலைவர் பதவிக்கு மிதுன் மனாஸ் பெயர் ஏற்கனவே உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பி.சி.சி.ஐ. வருடாந்திர பொதுக்குழு கூட்டம் செப்டம்பர் 28 அன்று டெல்லியில் நடைபெறுகிறது. அப்போது மிதுன் மனாஸ் புதிய தலைவராக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவார். அதே கூட்டத்தில் புதிய தேர்வு குழு உறுப்பினர்கள் உள்பட பல்வேறு நியமனங்களும் அறிவிக்கப்பட உள்ளன.
மிதுன் மனாஸ் இந்திய அணிக்காக ஒரு சர்வதேச போட்டியும் ஆடவில்லை என்றாலும், 157 முதல் தரப் போட்டிகளில் 9714 ரன்கள் எடுத்து 27 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.
டெல்லி அணியின் முன்னாள் கேப்டனாக விளங்கிய அவர், ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர்டெவில்ஸ், புனே வாரியர்ஸ் அணிகளுக்காக ஆடிய அனுபவம் பெற்றவர். ஓய்வு பெற்ற பின் ஜம்மு-காஷ்மீர் கிரிக்கெட் சங்கத்தில் நிர்வாக பணியாற்றிய அனுபவம் இவரை இந்த உயர்ந்த பதவிக்குக் கொண்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
English Summary
BCCI president CSK midhun