‘யாரிடமும் சொல்லாதீர்கள்’ என மிரட்டி மோசடி…! - மூதாட்டியை ஏமாற்றிய சைபர் கும்பல் வேட்டை...! - Seithipunal
Seithipunal


‘டிஜிட்டல் கைது’ என்ற பெயரில் நடத்தப்பட்ட அதிர்ச்சி தரும் சைபர் மோசடியில், 70 வயது மூதாட்டியிடமிருந்து ரூ.3.09 கோடி பணத்தை கும்பல் பறித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டேராடூன் நகரைச் சேர்ந்த அந்த மூதாட்டி, சில நாட்களுக்கு முன்பு சைபர் குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளார்.

அதில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி தன்னை மத்திய புலனாய்வு அமைப்பு அதிகாரி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ரூ.68 கோடி சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் தனது செல்போன் எண்ணுக்கு தொடர்பு இருப்பதாக தெரிவித்து மிரட்டியதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ‘டிஜிட்டல் கைது’ செய்யப்பட்டுள்ளீர்கள், இந்த விவகாரம் குறித்து யாரிடமும் தெரிவிக்கக் கூடாது; இல்லையெனில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்ததுடன், கைது செய்யாமல் இருக்க வங்கி விவரங்கள் வழங்க வேண்டும் என்றும், விசாரணை முடிந்ததும் பணம் திருப்பி தரப்படும் என்றும் நம்பவைத்துள்ளனர்.

இதன் பேரில், கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அக்டோபர் வரை, அவரது வங்கி கணக்கிலிருந்து ரூ.3.09 கோடி தொகையை கட்டுக்கட்டாக மாற்றி எடுத்துள்ளனர்.

நிரந்தர வைப்பு தொகைகள், பங்குகளை விற்ற பணம், நகைகளை அடகு வைத்து பெற்ற தொகை என அனைத்தையும் அவர் அனுப்பியதாகவும், ஒவ்வொரு முறையும் ‘கைது தவிர்க்கவே இந்த பணம்’ எனத் மோசடிக்காரர்கள் ஏமாற்றியதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர் தான் இது ஒரு திட்டமிட்ட மோசடி என்பதை உணர்ந்த அவர் அளித்த புகாரின் அடிப்படையில், டேராடூன் காவலர்கள் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Fraudulent threat Dont tell anyone Cyber ​​gang hunts down elderly woman who cheated


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->