நேபாள பேருந்து விபத்து: 6 பெண்கள் உட்பட 17 உயிரிழப்பு... படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை...!
Nepal bus accident 17 dead including 6 women Those seriously injured being treated hospital
நேபாளத்தின் போகரா பகுதியிலிருந்து காத்மாண்டு நோக்கி பயணிகளை ஏற்றிக் சென்ற பேருந்து, ஆற்றில் விழுந்து பெரிய விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த கோர விபத்தில், 6 பெண்கள் மற்றும் 11 ஆண்கள் உள்ளிட்ட மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
மேலும், 8 பெண்கள் உட்பட 27 பேர் காயமடைந்து அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெறுகிறார்கள்.
நேபாள் காவலர்கள் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி, விபத்துக்கான காரணங்களை உறுதிப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
English Summary
Nepal bus accident 17 dead including 6 women Those seriously injured being treated hospital