திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு திடீர் உடல்நலக்குறைவு...! முப்பெரும் விழா அதிரடி ஒத்திவைப்பு...! - துரைமுருகன் அறிவிப்பு
DMK leader MK Stalin suddenly falls ill Muperum festival postponed Durai Murugan announcement
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, இன்று நடைபெற இருந்த கட்சியின் முப்பெரும் விழா திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தி.மு.க. உருவான நாளான செப்டம்பர் 17-ந்தேதி, கட்சியின் நிறுவனத் தலைவர் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் 15-ந்தேதி மற்றும் தந்தை பெரியாரின் பிறந்தநாளான செப்டம்பர் 17-ந்தேதி ஆகிய மூன்று முக்கிய நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்து, தி.மு.க. சார்பில் ஆண்டுதோறும் முப்பெரும் விழா நடத்தப்பட்டு வருகிறது.

இந்த விழா, கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. விழாவின்போது தி.மு.க. சார்பில் பெரியார் விருது, அண்ணா விருது, கலைஞர் விருது, பாவேந்தர் விருது, பேராசிரியர் விருது மற்றும் மு.க.ஸ்டாலின் விருது உள்ளிட்ட விருதுகள் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டுக்கான முப்பெரும் விழா இன்று சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வந்தன.இந்த சூழலில், மு.க.ஸ்டாலினுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, இன்று நடைபெற இருந்த முப்பெரும் விழா ஒத்திவைக்கப்படுவதாக தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
விழா நடைபெறும் புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.இதனிடையே, சென்னையில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவிலும் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
DMK leader MK Stalin suddenly falls ill Muperum festival postponed Durai Murugan announcement