தங்கப் பிரியர்களுக்கு குட் நியூஸ்...! அதிரடியாகக் குறைந்தது தங்கம் விலை...! - இன்றைய நிலவரம் என்ன...?
Good news gold lovers Gold prices have dropped dramatically What situation today
கடந்த சில நாட்களாக தொடர்ந்து தங்கம் விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் நிலையில், இன்று அதன் விலையில் மீண்டும் சரிவு ஏற்பட்டுள்ளது.
இதனால் நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று ஆறுதல் அளிக்கும் வகையில் விலை குறைந்துள்ளது.நேற்று சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.45 குறைந்து ரூ.14,125-க்கு விற்பனையானது.இந்த நிலையில், இன்று தங்கம் விலை மேலும் சரிந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 குறைந்துள்ளது.
இதன்படி, ஒரு சவரன் தங்கம் ரூ.1,12,320-க்கும், ஒரு கிராம் ரூ.14,040-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.வெள்ளியை பொறுத்தவரையில், தொடர்ந்து 4-வது நாளாக விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.
ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
English Summary
Good news gold lovers Gold prices have dropped dramatically What situation today