கிரிவலத்திற்கு மக்கள் திரளுங்கள்: மார்ச் 2 திருப்பரங்குன்றம் நோக்கி நயினார் நாகேந்திரன் அழைப்பு...! - Seithipunal
Seithipunal


திருப்பரங்குன்றம் முருகன் கோவில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நடைபெற்று வரும் போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்ல, பாரதிய ஜனதா கட்சி முக்கிய தீர்மானம் எடுத்துள்ளது.

இதன் தொடர்ச்சியாக, வரும் மார்ச் 2-ஆம் தேதி கிரிவலம் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சதுர்த்தி மற்றும் கிருத்திகை திதிகள் ஒரே நாளில் கூடும் இன்றைய சிறப்புநாளை முன்னிட்டு, முருகப் பெருமானுக்கு ஏழு தீபங்கள் ஏற்றுமாறு கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதளப் பதிவில், “திருப்பரங்குன்றத்தில் கார்த்திகை தீபம் ஏற்றும் உரிமைக்காக நாம் தொடர்ந்து போராடி வருகிறோம்.

இன்று பிப்ரவரி 23-ஆம் தேதி, முருகப்பெருமானுக்காக ஆறு தீபங்களும், நம் பகுதியின் நலனுக்காக ஒரு தீபமும் என மொத்தம் ஏழு விளக்குகளில் தீபமேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்யுங்கள்.

மேலும், மார்ச் 2-ஆம் தேதி பௌர்ணமி நாளில் மாலை வேளையில் திருப்பரங்குன்ற மலையில் கிரிவலம் வர அனைவரும் இணைந்து கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

இறுதியாக “வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா! வீர தண்டாயுதபாணிக்கு அரோகரா!” என பக்தி முழக்கத்துடன் தனது பதிவை நிறைவு செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People should gather Girivalam Nayinar Nagendran calls Thiruparankundram March 2


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->