இண்டி கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளரா திமுகவின் திருச்சி சிவா? பரபரப்பு தகவல்! - Seithipunal
Seithipunal


இந்தியா கூட்டணியின் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக திமுக மாநிலங்களவை குழுத் தலைவரும் தமிழகத்தைச் சேர்ந்தவருமான திருச்சி சிவா நிறுத்தப்படலாம் என டெல்லி அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டின் 14வது குடியரசு துணைத் தலைவராக இருந்த ஜகதீப் தன்கர், 2027 ஆகஸ்ட் 10 அன்று பதவிக்காலம் நிறைவடைய இருந்தபோதும், உடல்நலக் காரணத்தால் கடந்த ஜூலை 21 அன்று திடீரென ராஜிநாமா செய்தார்.

இதனால், புதிய குடியரசு துணைத் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்தது. செப்டம்பர் 9 அன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளதாகவும், வேட்பு மனு தாக்கல் செய்யும் கடைசி நாள் ஆகஸ்ட் 21 எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளராக, மகாராஷ்டிர ஆளுநரான சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிக்கப்பட்டார். 

இந்நிலையில், இண்டி கூட்டணி வேட்பாளராக திருச்சி சிவாவை அறிவிக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் இன்று மாலை நடைபெறும் இண்டி கூட்டணி தலைவர்கள் கூட்டத்திற்குப் பிறகு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

DMK MP Tiruchy Siva may be nominated Presidential candidate Indi Alliance


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->