தமிழ்நாட்டில் பீகாரைச் சேர்ந்த ஆளுநர் ஆர்என் ரவி மட்டும் தான் துன்பப்படுகிறார்... கனிமொழி பதிலடி! 
                                    
                                    
                                   DMK MP Kanimozhi condemn to PM Modi bjp 
 
                                 
                               
                                
                                      
                                            பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தின்போது, தமிழ்நாட்டில் திமுகவினரால் பீகார் தொழிலாளர்கள் துன்புறுத்தப்படுவதாக பிரதமர் மோடி பேசி இருந்தார்.
இதற்க்கு பதில் கொடுத்துள்ள திமுக எம்பி கனிமொழி, "வடமாநிலங்களில் தேர்தல் வந்துவிட்டால், தமிழ்நாட்டையும் தமிழர்களையும் எதிரியாகச் சித்தரித்து வெறுப்புவாத அரசியல் செய்வது பாஜகவின் வாடிக்கை. கடந்த ஒடிசா தேர்தலிலும் இதையே தான் செய்தனர்.
ஆனால், கோவிட் பெருந்தொற்றின் போது யார் தங்களை நடக்கவிட்டுக் கொடுமைப்படுத்தியது, அக்காலத்தில் எவ்வாறு தமிழ்நாடு தங்களுக்கு உதவியது என்று அந்த தொழிலாளர்களுக்குத் தெரியும். அடுத்த ஆண்டு தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு வருகையில், பிரதமர் அவர்கள் இதே கருத்தைச் சொல்லட்டும். தமிழர்களுடன் சேர்ந்து வெளிமாநில தொழிலாளர்களும் அவருக்கு விளக்குவார்கள், தமிழ்நாடு தங்களை எவ்வாறு வைத்துள்ளது என்று.
தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டுகளாக பீகாரைச் சேர்ந்த ஒருவர் மட்டுமே தனது அரசியலைச் செய்யமுடியாமல் துன்பப்பட்டு வருகிறார். அவரும் ராஜ்பவனில் வசித்துவருகிறார்" என்று தெரிவித்துள்ளார்.
 
                                     
                                 
                   
                       English Summary
                       DMK MP Kanimozhi condemn to PM Modi bjp