அடித்து காலை உடைப்பேன் - ரவுடியாக மாறிய திமுக எம்எல்ஏ ராஜா! வைரல் வீடியோ - வாய் மூடிய உடன்பிறப்புகள்!
DMK MLA SR Raja video
மறைமலைநகரில் கார் உதிரி பாகம் தயாரிக்கும் தொழிற்சாலை நிர்வாகத்தினரை, ஊழியர்களை தகாத வார்த்தையில் பேசி, கால்களை உடைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்த தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா குறித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
தாம்பரம் சட்டமன்ற தொகுதியின் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர் ராஜா, தனியார் நிறுவன தொழிலதிபரை, "காலை உடைத்து விடுவேன். கம்பெனியை இழுத்து மூடி விடுவேன்" என்று மிரட்ட, அதற்கு அந்த தொழிலதிபர், "உன் சொந்த கட்சி காரனை மதிக்கத் தெரியாத உன்னைப் பற்றி மேல் இடத்தில் புகார் அளிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த காணொளியில் இருவரின் உரையாடல் பின் வருமாறு:
திமுக எம்.எல்.ஏ : தோ பார் கம்முனு இரு. மாலைக்குள் உன் கம்பெனியை இழுத்து மூடி விடுவேன். வேறு யாரிடமாவது வைத்துக் கொள். நீ இந்த பக்கம் தானே வர வேண்டும். சொல்லிவிட்டேன், இங்குதானே உனக்கு அலுவலகம். யார் கேட்டலாம் நான் சொன்னதாக சொல்.
தொழிலதிபர் : சரி நீங்கள் எனது கம்பெனியை மூடுவேன் என்று சொன்னீர்களே., மூடுங்கள்.
திமுக எம்.எல்.ஏ : நீ என்ன பெரிய இவனா? எனக்கு என்ன பயம் காட்டுகிறாயா?
நான் அப்படி சொல்லவில்லை. நீங்கள் தான் அப்படி சொல்கிறீர்கள். அப்படி நடந்து கொண்டிருக்கிறீர்கள்.
திமுக எம்.எல்.ஏ : நீ யார் என்று தெரிந்து தான் இங்கு வந்துள்ளேன். நீ சிங்கப்பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்தவன் என்று தெரிந்துதான் உள்ளே வந்திருக்கிறேன்.
தொழிலதிபர் : நீங்கள் உங்கள் கட்சிக்காரனாகியே எனக்கே மரியாதையை கொடுக்கவில்லை. உங்களுக்கு நான் ஓட்டு போட்டு உள்ளேன். எனக்கு மரியாதை தரவில்லை. நான் நீதிமன்றம் செல்கிறேன். தலைமைச் செயலகம் செல்கிறேன். இந்த காணொளியை அப்படியே முதல்வர் ஸ்டாலினிடம் காட்டுவேன்.
உங்கள் மீது புகார் அளிப்பேன். நீங்கள் என் காலை உடைப்பேன். ஆபாச வார்த்தைகளால் திட்டியது குறித்து புகார் அளிக்க இருக்கிறேன்.
திமுக எம்எல்ஏ மீண்டும் ஆபாசமான வார்த்தைகளால் திட்டுகிறார். இந்த காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வு ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2006-2011 ஆண்டு திமுக ஆட்சிக்காலத்தில் ரவுடிசம், கொலை, கொள்ளை சம்பவங்கள் என சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருந்ததாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில், அதேபோன்ற ஒரு ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் வந்துள்ளதாக இந்த காணொளியை பகிர்ந்து சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கடந்த 10 ஆண்டுகளாக உங்களை ஆட்சிக்கு வரவிடாமல் மக்கள் ஏஆர் தடுத்து நிறுத்தினார்கள் என்று, இப்போது அறியாத இளைஞர்கள் நடக்கும் நிகழ்வுகளை பார்த்து அறிந்து கொள்வார்கள் என்றும் நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.