இறந்த பிறகும் நீ புகழப்படுகிறாய் - கவிஞர் வைரமுத்து ட்வீட்.!!
poet vairamuthu tweet about kalaingar karunanithi memorable day
இன்று தமிழகத்தின் முன்னாள் முதல்வரும், திமுகவின் மூத்த தலைவருமான கருணாநிதியின் நினைவுநாள் அனுசரிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு பல்வேறு தரப்பினர் கலைஞர் கருணாநிதிக்கு புகழஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கலைஞர் நினைவு நாளை முன்னிட்டு தனது எக்ஸ் தள பக்கத்தில் கவிதை வடிவில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்து இருப்பதாவது:-
"புகழப்படுவதற்கோ
இகழப்படுவதற்கோ
உயிர்ப்போடு திகழவேண்டும்
ஒரு பொருள்
இறந்த பிறகும்
நீ புகழப்படுகிறாய்
மற்றும்
இகழப்படுகிறாய்
என்ன பொருள்?
உன்னதப் பொருளாக
இன்னும் நீ
உயிர்ப்போடு திகழ்கிறாய்
என்று பொருள்
இரு இப்படியே
இறந்த பிறகும்
உனக்கு
இறப்பில்லை உயிர்ப்பே!" என்றுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
poet vairamuthu tweet about kalaingar karunanithi memorable day