திருப்பூர் எஸ்.ஐ கொலை வழக்கு - குற்றவாளி மணிகண்டன் என்கவுண்டர்.!! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மடத்துக்குளம் பகுதியில் எம்.எல்.ஏ. மகேந்திரன் என்பவரின் தோட்டத்தில் நேற்று சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் சண்முகவேல் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

இது தொடர்பான வழக்கில் குற்றவாளிகளான மூர்த்தி மற்றும் அவரது மகன் தங்கப்பாண்டியன் உள்ளிட்ட இரண்டு பேரும் திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று சரண் அடைந்தனர். மேலும் தலைமறைவாக இருந்த மணிகண்டன் என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர்.

இந்த நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டனை கைது செய்த போலீசார் அவரை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்றபோது மணிகண்டன் போலீசாரை அரிவாளால் தாக்க முயன்றுள்ளார். இதில் காவல் உதவி ஆய்வாளர் சரவணனுக்கு கையில் காயம் ஏற்பட்ட நிலையில், அவரை போலீசார் என்கவுண்டரில் சுட்டுக்கொன்றனர்.

இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட உதவி ஆய்வாளர் சரவணன் விளக்கம் அளித்தார். அதாவது:- "உப்பாரு அணை ஓடை அருகே ஆயுதத்தை மறைத்து வைத்ததாக மணிகண்டன் கூறியதையடுத்து அதனை எடுப்பதற்காக மணிகண்டனை அங்கு அழைத்து சென்றோம்.

அங்கு அரிவாளை எடுத்த மணிகண்டன் உடனே எங்களை துரத்த ஆரம்பித்தான். ஆயுதத்தை கீழே போடுமாறு இன்ஸ்பெக்டர் எச்சரித்தும் மணிகண்டன் கேட்கவில்லை. தொடர்ந்து அரிவாளுடன் துரத்தி வந்த மணிகண்டன் என்னை கையில் வெட்டினார். என் மீது தாக்குதல் நடத்திய பின்னர் தற்காப்பிற்காக இன்ஸ்பெக்டர்தான் அவரை சுட்டார்" என்றுத் தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

accuest manikandan encounter for si murder case in tirupur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->