கலைஞர் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
Chief Minister MK Stalin paid tribute by laying flowers artists memorial
இன்று மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 7-ம் ஆண்டு நினைவு நாள்.இதனையொட்டி அண்ணாசாலையில் இருக்கும் அவரது சிலைக்கு கீழ் வைக்கப்பட்டிருந்த உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி வணங்கினார்.

அதன் பின்னர் துணை முதலைமைச்சரும், அமைச்சர்களும் கலைஞர் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தி வணங்கினார்கள்.இதைத் தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கலைஞர் கருணாநிதி நினைவிடம் வரை அமைதி பேரணி தொடங்கி நடைபெற்றது.
மேலும், ஓமந்தூரார் அரசினர் தோட்டத்திலிருந்து மெரினாவில் இருக்கும் கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதி பேரணியில் தி.மு.க. எம்.பி.க்கள், மாமன்ற உறுப்பினர்கள்,அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் மற்றும் ஆயிரக்கணக்கான தி.மு.க. தொண்டர்கள் கலந்துக் கொண்டனர்.
அடுத்ததாக மெரினா கடற்கரையில் பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மலர்தூவி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.மேலும், இதைத்தொடர்ந்து கலைஞர் கருணாநிதி நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
அவரை தொடர்ந்து அமைச்சர்கள், தி.மு.க. நிர்வாகிகளும் அண்ணா, கலைஞர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.மேலும்,இணையத்தில் பலர் கலைஞரின் நினைவுநாளை நினைவுகூர்ந்து வருகின்றனர்.
English Summary
Chief Minister MK Stalin paid tribute by laying flowers artists memorial