அறுந்து விழுந்த தேசியக்கொடியால் அடிக்கப் பாய்ந்த திமுக எம்எல்ஏ.! வைரலாகும் வீடியோ.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் 77 வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றியது போல சென்னை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.

அதேபோன்று தமிழக முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அலுவலகங்கள் மற்றும் அரசு அலுவலகங்களில் இன்று தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கும்பகோணம் திமுக சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றும் போது அருந்து விழுந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

மேலும் தேசியக் கொடி அறுந்து விடும்போது அருகில் இருந்த நபரை திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் அடிக்க பாய்ந்தது சர்ச்சையை கிளப்பி உள்ளது. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றும் போது கொடி கீழே விழுந்தது மற்றும் அருகில் இருந்தவரை அடிக்க பாய்ந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

DMK MLA Chakottai Anbazhagan when hoisting national flag fall down


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->