"திமுக ஆட்சி தொடர வேண்டும்": தருமபுரி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின் உரை!
DMK MK Stalin ADMK BJP
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் பி.பழனியப்பன் இல்லத் திருமண விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். அவருடன் முத்தரசன், திருமாவளவன், அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சாமிநாதன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
வெல்லும் தமிழ் பெண்கள்:
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின் வெற்றியைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிய முதலமைச்சர்,
கூடுதலாக 17 லட்சம் சகோதரிகளுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. விடுபட்டவர்களுக்கும் இத்தொகை கிடைக்க நிச்சயம் ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்தார்.
திராவிட மாடல் ஆட்சி:
திராவிட மாடல் ஆட்சி குறித்துப் பேசிய அவர், "எவ்வளவோ சோதனைகளையெல்லாம் சாதனைகளாக மாற்றிய ஆட்சிதான் திராவிட மாடல் ஆட்சி" என்று பெருமிதம் கொண்டார்.
தேர்தல் பணிகள்:
வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR): வாக்காளர் உரிமையைக் காப்பாற்ற, வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகளில் (SIR) திமுகவினர் அயராது பாடுபட்டனர்.
அடுத்த கட்டம்: தேர்தல் முடியும் வரை திமுகவினரின் பணிகள் முடிவடையவில்லை. இத்திட்டங்களின் சாதனைகளை வீடு வீடாகக் கொண்டு சேர்த்து, அவற்றை வாக்குகளாக மாற்ற வேண்டும்.
தொடரும் ஆட்சி: தமிழ்நாட்டில் வளர்ச்சி தொடர வேண்டும் என்றால், திமுகவின் ஆட்சி தொடர வேண்டும். தமிழ்நாட்டில் ஏழாவது முறையாகத் திராவிட மாடல் ஆட்சி தொடரும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சட்டசபையில் ஒருபோதும் முறையாகப் பதிலளித்தது இல்லை என்றும் முதலமைச்சர் விமர்சனம் செய்தார்.