விஜய் வருகைக்கு முன் ஈரோட்டில் பரபரப்பு…! தவெக நிர்வாகிகள் இடையே தள்ளுமுள்ளு...!
There stir Erode before Vijays arrival scuffle between tvk administrators
தமிழக வெற்றிக் கழகத்தின் பரபரப்பான பிரச்சாரக் களமாக நாளை (வியாழக்கிழமை) பெருந்துறையை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள சரளை மாறுகிறது. இந்த மக்கள் திரள் கூடும் பிரச்சாரக் கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகளை நேரில் கண்காணிக்க கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் ஈரோட்டில் முகாமிட்டு பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.
இதற்கிடையே, நேற்று என். ஆனந்த் கோபி பச்சைமலை முருகன் கோவிலுக்கு சென்று சிறப்பு தரிசனம் செய்தார். அங்கு அவருக்கு பரிவட்டம் அணிவித்து, மாலை சூட்டி கோவில் நிர்வாகம் மற்றும் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்த நிகழ்வில் மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, பிரதீப்குமார் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆனால், இதற்கு முன் ஈரோட்டுக்கு வந்த போது தவெக பொதுச்செயலாளர் என். ஆனந்திற்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் தர்மபுரி – ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் இடையே வாக்குவாதம் வெடித்தது.
வாக்குவாதம் தள்ளுமுள்ளு வரை சென்றதால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த என். ஆனந்த் உடனடியாக இரு தரப்பினரையும் அழைத்து பேசி சமாதானம் செய்தார்.
அவரது தலையீட்டால் சிக்கல் கட்டுக்குள் வந்தது.மேலும், பிரச்சாரத்திற்கான தயாரிப்புகளோடு, கட்சிக்குள் ஏற்பட்ட இந்த திடீர் குழப்பமும் ஈரோட்டில் அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
English Summary
There stir Erode before Vijays arrival scuffle between tvk administrators