தமிழ்நாடு உற்பத்தித் துறை முன்னேற்றத்தில் முன்னணி: GDP 16% உயர்வு, 2030 இலக்கு 1 டிரில்லியன் டாலர்...!- தங்கம் தென்னரசு
Tamil Nadu leads manufacturing sector progress GDP up 16percentage 2030 target 1 trillion dollars Gold Southern State
சென்னையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்ததாவது,"தமிழ்நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 16% வளர்ச்சி அடைந்துள்ளது, இது நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியக் குறியீடாகும்.
மராட்டியாவை ஒப்பிடுகையில் உற்பத்தித் துறையில் தமிழகம் முன்னணி நிலையில் உள்ளது. அரசு நடைமுறை செய்த சிறந்த கொள்கைகளின் விளைவாக இதற்கான வெற்றி கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டின் உற்பத்தித்துறை, கட்டுமானத் துறை, மின்னணு உற்பத்தித் துறை உள்ளிட்ட அனைத்து முக்கியத் துறைகளிலும் மாநிலம் முன்னிலையில் உள்ளது.
2030-ஆம் ஆண்டுக்குள் பொருளாதார இலக்கை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் வரை எடுத்துச் செல்லும் நோக்கம் உள்ளது.
தற்போதைய நிலவரப்படி தமிழ்நாட்டின் பொருளாதாரம் சிறந்த உச்சத்தைத் தொட்டுள்ளது.
மேலும் முதலீட்டாளர் மாநாடுகள் மூலம் ரூ.11.40 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், உயர் கல்வியில் மாணவர் சேர்க்கை 47% உயர்வு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
English Summary
Tamil Nadu leads manufacturing sector progress GDP up 16percentage 2030 target 1 trillion dollars Gold Southern State